
அஜித் குமார், (மே 1 1971)தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.
காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் கேட்டுப்பார், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல் போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.
அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அவரது பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைததது.
இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.
நடிகர் அஜித் தனது மனைவி குழந்தையுடன்.அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தான் வேண்டும் என்று அஜித் கூறியதால் ரஜினி ரசிகர்கள் அவரை புறக்கணித்தனர். இதனால் அவரது சில படங்கள் தோல்வியை தழுவின. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், அஜித்குமாருக்கு சில அறிவுரைகளையும் ரஜினி வழங்கினார். வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்கு ரஜினி தனது வீட்டில் அஜித்துக்கு விருந்து கொடுத்தார்.
அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
2010 அசல் இரட்டை வேடம்
2008 ஏகன் சிவா
2007 பில்லா 2007 பில்லா/வேலு இரட்டை வேடம்
2007 கிரீடம் சக்திவேல்
2007 ஆழ்வார்
2006 வரலாறு மூன்று வேடங்கள்
2006 திருப்பதி
2006 பரமசிவன்
2005 ஜீ
2004 ஜனா ஜனா
2004 அட்டகாசம் குரு/ ஜீவா இரட்டை வேடம்
2003 என்னை தாலாட்ட வருவாளா
2003 ஆஞ்சநேயா
2002 வில்லன் இரட்டை வேடம்
2002 ரெட்
2002 ராஜா ராஜா
2001 பூவெல்லாம் உன் வாசம்
2001 தீனா தீனா
2001 அசோகா
2001 சிட்டிசன்
2000 முகவரி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000 உன்னை கொடு என்னை தருவேன்
1999 நீ வருவாய் என
1999 தொடரும்
1999 உன்னை தேடி
1999 ஆனந்த பூங்காற்றே
1999 அமர்க்களம் (மனைவி ஷாலினியுடன்)
1999 வாலி
1998 காதல் மன்னன்
1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
1998 உயிரோடு உயிராக
1998 அவள் வருவாளா
1997 ரெட்டை ஜடை வயசு
1997 ராசி
1997 பகைவன்
1997 நேசம்
1997 உல்லாசம்
1996 வான்மதி
1996 மைனர் மாப்பிள்ளை
1996 கல்லூரி வாசல்
1996 காதல் கோட்டை
1995 ராஜாவின் பார்வையினில்
1995 ஆசை
1994 பாசமலர்கள்
1994 பவித்ரா
1993 அமராவதி
1992 பிரம்ம புஸ்தகம் தெலுங்கு(அறிமுகம்)
No comments:
Post a Comment